How You Sell Matters வாழ்க்கையில் நாம் கடந்து வருகிற சாதாரணமான மனிதர்களிடம் இருந்து உன்னதமான வியாபார நுணுக்கங்களையும் , நிர்வாக சூத்திரங்களையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் அடிக்கடி உணர்ந்து இருக்கிறேன் . சில நாட்களுக்கு முன் நான் கண்டுணர்ந்த ஒரு நிகழ்வு :- எங்கள் தெருவில் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகள் தினமும் வந்து செல்வது வழக்கம் . எல்லா வியாபாரிகளும் தாங்கள் விற்கும் பொருட்களின் பெயர்களை சத்தமாக கூவிக்கூவி விற்ற காலம் போய் , தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பதிவு செய்யப்பட்ட pre-recorded voice message ஐ ஒலிபெருக்கியின் மூலமாக ஒலிக்க விட்டுக் கொண்டே செல்வார்கள் . குறிப்பிட்ட பொருட்கள் தேவைப்படுபவர்கள் , உடனே வீட்டுக்கு வெளியே வந்து வாங்கிச் செல்வார்கள் . ஆனால் , சிலநாட்களுக்கு முன்னர் நான் வீட்டில் online class ல் இருந்தபோது , ஒரு வியாபாரி prerecorded voice message க்கு பதிலாக mic with speaker ல் அறிவித்து கொண்டே வந்தார் . அந்த அறிவிப்பு , *" அம்மா நாளைக்கு அமாவாசை , வா...