How You Sell Matters
வாழ்க்கையில் நாம் கடந்து வருகிற சாதாரணமான மனிதர்களிடம் இருந்து உன்னதமான வியாபார நுணுக்கங்களையும், நிர்வாக சூத்திரங்களையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் அடிக்கடி உணர்ந்து இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் நான் கண்டுணர்ந்த ஒரு நிகழ்வு:-
எங்கள் தெருவில் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகள் தினமும் வந்து செல்வது வழக்கம். எல்லா வியாபாரிகளும் தாங்கள் விற்கும் பொருட்களின் பெயர்களை சத்தமாக கூவிக்கூவி விற்ற காலம் போய், தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பதிவு செய்யப்பட்ட pre-recorded voice message ஐ ஒலிபெருக்கியின் மூலமாக ஒலிக்க விட்டுக் கொண்டே செல்வார்கள். குறிப்பிட்ட பொருட்கள் தேவைப்படுபவர்கள், உடனே வீட்டுக்கு வெளியே வந்து வாங்கிச் செல்வார்கள்.
ஆனால், சிலநாட்களுக்கு முன்னர் நான் வீட்டில் online class ல் இருந்தபோது, ஒரு வியாபாரி prerecorded voice message க்கு பதிலாக mic with speaker ல் அறிவித்து கொண்டே வந்தார். அந்த அறிவிப்பு, *"அம்மா நாளைக்கு அமாவாசை, வாங்க; வந்து அமாவாசை காய்கறியெல்லாம் வாங்கிக்கோங்க"* என்று கூறி கொண்டு வந்தார். இந்த அழைப்பு புதுமையாக இருந்தது எனக்கும் online class ம் முடிந்ததால் நான் வெளியில் வந்து கவனித்தேன், மற்ற வியாபாரிகளைவிட இவருக்கு விற்பனை நன்றாகவே இருந்ததையும் பார்க்க முடிந்தது..
அமாவாசை அன்றைக்கு எல்லாருமே, கத்தரிக்காய், முருங்கைக்காய் வாழைக்காய் வாங்குவார்கள். அது எல்லோருக்குமே தெரியும். ஆணால் அமாவாசைக்கான காய்கறிகள் என்று சொல்லும்போது அதே காய்களுக்கு அங்கு ஒரு முக்கியத்துவம் வருகிறது.
இவருடைய வார்த்தைகளில் ஒரு *sense of urgency & emotional connect* இருந்தது. ஆகவே நாம் எதை விற்கிறோம் என்பதைவிட எப்படி சொல்லி விற்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும்.
நன்றி.
I wholeheartedly thank Mr Chinna Maradu for penning down my thoughts into beautiful Tamil Narration
Comments
Post a Comment